சிரியாவில் அமெரிக்கப் படைகள் பின்வாங்குவதற்கு முன் நேட்டோவை அணுகாததால், நேட்டோ அமைப்பு "மூளைச்சாவு" அடைந்துவிட்டது என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் (Emmanuel Macron) குற்றம்சாட்டினார்.
மேலும் டிரம்ப் இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்தால், இந்த அமைப்பு முழுவதுமாகக் கலைந்துவிடும் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் (Joe Biden)எச்சரித்துள்ளார்.
29 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பில் சில நாடுகள் மட்டுமே பாதுகாப்பிற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% பணத்தை அளித்துள்ளனர். இவ்வாறு பல விவாதங்களுடன் இந்த மாநாடு கூடியது.
மாநாட்டின் முதல் நாளான நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல முடிச்சுகளைக் களைந்துள்ளார். பிரான்ஸ் அதிபரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தவர், ``வெறுமனே உங்களால் அப்படிச் சொல்லிவிட முடியாது.
எங்கள் எல்லோரையும் விட பிரான்ஸிற்குத்தான் நேட்டோ அவசியம் தேவைப்படுகிறது. உண்மையில் அமெரிக்காதான் நேட்டோவால் குறைந்த லாபம் அடையும் நாடு" என்றார். மேலும் அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி மூலம் பாரம் சுமத்தியுள்ள பிரான்ஸ் மேலவைக் குறித்து பேசும்போது,
"அமெரிக்க நிறுவனங்கள் மீது யாரும் தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்த முடியாது. பிரான்ஸ் பொருள்கள் மீதான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மீது அமெரிக்கர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவோம்" என்றார்.