நான் மட்டும் இல்லை என்றால்... மூன்றாம் உலகப்போர்தான்!’ -நேட்டோ மாநாட்டில் ட்ரம்ப்

நேட்டோ 31-வது உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது. லண்டனின் வாட்ஃபோர்டு (Watford) நகரில் நடக்கும் இம்மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 29 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இரண்டாம் உலகப்போரை அடுத்து 1949-ல் கையொப்பமான இந்த நேட்டோ ஒப்பந்தம் வெற்றிகரமாக 70 ஆண்டை நிறைவு செய்துள்ளது.


சமீப காலமாக, நேட்டோ நாடுகளுக்கு இடையே எழுந்து வரும் உட்பூசல்களுக்கு இந்த மாநாடு முற்றுப்புள்ளியாகும் என அரசியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர். அதனால் அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.


ந்நிலையில் திங்கட்கிழமை மாலை லண்டன் வந்தடைந்த டிரம்ப்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் உலகத் தலைவர்களால் உற்று நோக்கப்பட்டு வருகிறது.


நேட்டோ ஒப்பந்தத்தின் படி, உறுப்பினரான ஒருநாடு எந்த நாட்டின் மீது போர் தொடுத்தாலும் மற்ற அனைவரும் அவருக்கு உறுதுணையாக போர் உதவி செய்ய வேண்டும். இந்த முக்கிய விதியே பெரும் தலைவலிக்கும் வழிவகுத்துள்ள