அந்நிய ஏஜெண்டுகள் என முத்திரை குத்தப்படுவோர் அந்நிய நாட்டினரிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசியலில் ஈடுபடுபர்கள் என வரையறை செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் ஏற்கெனவே 2012ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் மூலம் ஊடக நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை வெளிநாட்டு ஏஜெண்டுகளாக முத்திரை குத்தும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டது.
இந்தச் சட்டத்தின் விரிவாக்கத்தின்படி, தனிநபர்களும் இந்த சட்டத்தில் அடங்குவார்கள் எனவும் உடனடியாக இது அமலுக்கு வந்துவிடுகிறது எனவும் ரஷ்ய அரசு இணையதளம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்நிய ஏஜெண்டுகள் என முத்திரை குத்தப்படுவோர் அந்நிய நாட்டினரிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசியலில் ஈடுபடுபர்கள் என வரையறை செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் கட்டாயம் சட்ட அமைச்சகத்தில் முறையாக பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் தங்களது வெளியீடுகளில் அந்நிய ஏஜெண்ட் என்ற லேபிள் இடம்பெற வேண்டும் என்றும் புதிய சட்ட விதிகளில் அறிவுறுத்தப்படுகிறது.