தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் திறமை வாய்ந்தவர். எனினும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்காவிற்கு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை" என்றார். சீனாவுடன் வர்த்தகம் செய்வதன் தொடர்பான கேள்விக்கு, ``சீனாவுடன் நல்ல ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்த வேண்டும். வெகுவிரைவில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவோம்" என்றார்.
தொடர்ந்து, ``நேட்டோ நிச்சயம் ரஷ்யாவுடன் ஆயுதக் கட்டுப்பாடு குறித்து பேச வேண்டும். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான தொடர்பு நல்ல நிலையில் நீடித்து வருகிறது.
அவர் நிச்சயம் அணு ஆய்வு ஒப்பந்தத்தை மனதில் வைத்திருப்பார். நான் மட்டும் அமெரிக்க அதிபராக இல்லை என்றால் நிச்சயம் நாம் அனைவரும் மூன்றாம் உலகப் போரின் மத்தியில்தான் இருந்திருப்போம்" என்றார்